பிரதமர் மோடி அமேதி தொகுதியில் மார்ச் 3ந்தேதி சுற்றுப்பயணம்

ராகுல் காந்தியின் நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் பிரதமர் மோடி வருகிற மார்ச் 3ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2019-02-21 07:33 GMT
அமேதி,

பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதிக்கு வருகிற மார்ச் 3ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  இந்த பயணத்தில் துப்பாக்கிகள் தயாரிக்கும் முன்ஷிகஞ்ச் ஆயுத தொழிற்சாலையில் புதிய பிரிவை அவர் தொடங்கி வைக்கிறார்.

இதன்பின் பொது கூட்டம் ஒன்றிலும் கலந்து கொள்கிறார்.  கடந்த மக்களவை தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்ட மத்திய ஜவுளி துறை மந்திரி ஸ்மிரிதி இரானியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

வருகிற 27ந்தேதி அமேதிக்கு செல்லவிருந்த நிலையில் பிரதமர் மோடியின் பயண திட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்