5-வது முறையாக அமலாக்கத்துறை முன் வதேரா மீண்டும் ஆஜர்

வதேரா 5-வது முறையாக அமலாக்கத்துறை முன் மீண்டும் ஆஜரானார்.

Update: 2019-02-22 22:30 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியாவின் மருமகனுமான ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்து வாங்கியதில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள இந்த குற்ற வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி சிறப்பு கோர்ட்டு ஏற்கனவே வதேராவுக்கு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி டெல்லி ஜாம்நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 20-ந்தேதி வரை 4 முறை வதேரா ஆஜரானார். இதைத்தொடர்ந்து 5-வது முறையாக நேற்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் அவர் ஆஜரானார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களிடம் விசாரணை நடத்தி பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், வதேராவிடம் நேற்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வதேராவை கைது செய்வதற்கு கோர்ட்டு தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்