காஷ்மீருக்கு தனி பிரதமர் விவகாரம்; 370 மற்றும் 35ஏ பிரிவை நீக்குவது தவிர வேறு வழியில்லை; ராஜ்நாத் சிங்

காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என சிலர் கூறினால் 370 மற்றும் 35ஏ பிரிவை நீக்குவது தவிர வேறு வழியில்லை என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Update: 2019-04-08 15:24 GMT
ஜம்மு,

காஷ்மீர் மாநிலத்திற்கு என அரசியலமைப்பு சட்ட பிரிவு 370 மற்றும் 35ஏன்படி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.  இச்சட்ட பிரிவை நீக்கும்படி பா.ஜ.க.வின் சில தலைவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இதனை அடுத்து ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா கடந்த சில நாட்களுக்கு முன் கூறும்பொழுது, மாநிலத்தின் அடையாளம் பாதுகாக்கப்பட ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என கூறினார்.  இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சுசித்கார் பகுதியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பேசினார்.

காஷ்மீர் விவகாரம் பற்றி சிங் பேசும்பொழுது, நீண்ட காலத்திற்கு இங்கு முதல் மந்திரியாக இருந்தவர்கள், மாநிலத்திற்கு தனியாக பிரதமர் வேண்டும் என கூறி வருகின்றனர்.  ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என சிலர் கூறினால், 370 மற்றும் 35ஏ பிரிவை நாங்கள் நீக்குவது தவிர வேறு வழியேயில்லை என்று பேசினார்.

மேலும் செய்திகள்