வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் விஜய் மல்லையா மீண்டும் உறுதி

வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா மீண்டும் உறுதியளித்துள்ளார்.

Update: 2019-04-29 14:19 GMT

இந்திய வங்கிகளுக்கு ரூ. 9000 கோடி திருப்பிச் செலுத்த வேண்டிய வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளரும் கையெழுத்திட்டுள்ளார். இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இதற்கிடையே மீண்டும், வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா உறுதியளித்துள்ளார். 

விஜய் மல்லையா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,  “ஜெட் ஏர்வேஸ் வீழ்வு தொடர்பான டிவி தொலைக்காட்சிகளி விவாதங்களை பார்த்துக்கொண்டிக்கிறேன், ஊழியர்கள் சம்பளம் பெறாத விவகாரம், வேலையின்மை, வேதனை, கஷ்டம், வங்கியிலிருக்கும் செக்யூரிட்டி, மீட்டெழுவதற்கான வாய்ப்பு குறித்து விவாதம் நடக்கிறது. ஆனால் இங்கு நான் 100 சதவீதம் வங்கி கடனை திருப்பி செலுத்திவிடுகிறேன் என உறுதியாக கூறுகிறேன், ஆனால் வங்கிகள் அதனை எடுத்துக்கொள்ளவில்லை ஏன்? 

இந்தியாவில் கிங்பிஷர் உள்பட பல்வேறு விமான நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளனர். முன்னர் எதிர்பார்க்கவே முடியாத நிலையில் இருந்த ஜெட் ஏர்வேசும் சரிவை சந்தித்துள்ளது. இவையெல்லாம் வர்த்தக தோல்விகளாகும். ஆனால் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு என் மீது மட்டும் குற்ற வழக்குகளை தொடர்ந்துள்ளன. 100 சதவிதம் திரும்ப செலுத்திவிடுகிறேன் என்றும் இது நடக்கிறது. ஏன் என்னை மட்டும்? என்பது மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது,” எனக் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்