ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

Update: 2019-05-23 05:54 GMT
ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. அதன்படி, 176 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. 

அண்மையில் கிடைத்த முன்னணி நிலவரப்படி,  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தெலுங்கு தேசம் 29 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்