சி.பி.ஐ. கமிஷ்னர் என்று ஏமாற்றி சோதனை நடத்தியவர் கைது

உத்தரபிரதேசம் மாநிலத்தில் சி.பி.ஐ. கமிஷ்னராக ஏமாற்றி சோதனை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-06-23 08:22 GMT
முசாப்பர்நகரில் வணிகர் ஒருவருடைய வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றது. போலீஸ் உடை அணிந்தவர்களுடன் இச்சோதனை நடைப்பெற்றது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்த பிற வணிகர்கள் போராட்டம் மேற்கொண்டனர். போலீசாரும் போராட்டம் குறித்து தகவல் அறிந்து அங்குவந்தனர். அங்கு வந்த போலீசாருக்கு சந்தேகம் நேரிட்டது. சி.பி.ஐ. அதிகாரியென கூறியவரின் மீது சந்தேகப்பார்வை பட்டது. உடனடியாக போலீசார் விசாரணையை தொடங்கினர். உண்மை தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் அந்நபர் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க தொடங்கினார். ஆனால் வணிகர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்நபரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்