மும்பையில் பருவமழை தொடங்கியது; மராட்டியம் முழுவதும் பரவலாக மழை

மும்பையில் தென்மேற்கு பருவழை தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-06-25 13:53 GMT
இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை காலதாமதமாக தொடங்கியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் காரணியாக உள்ள தென்மேற்கு பருவமழை பொழிவில் இவ்வாண்டு இதுவரையில் 33 சதவீதம் வரையில் பற்றாக்குறை நேரிட்டுள்ளது. 

மராட்டிய மாநிலத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்தது.

மும்பைக்கு வழக்கமாக ஜூன் மாதம் 10-ம் தேதி பருவமழை வரும். இம்முறை மிகவும் காலதாமதமாக வந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரங்களில் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு  மாநிலங்களிலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்