சுங்க கட்டண ஊழியர்களை தாக்கிய பா.ஜனதா எம்.பி.யின் பாதுகாவலர்கள் - வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

பா.ஜனதா எம்.பி.யின் பாதுகாவலர்கள், சுங்க கட்டண ஊழியர்களை தாக்கினர். மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-06 21:29 GMT
ஆக்ரா,

உத்தரபிரதேச மாநிலம் எடாவா தொகுதி பா.ஜனதா மூத்த எம்.பி.யும், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவருமான ராம்சங்கர் கதேஹரியா எடாவாவில் இருந்து டெல்லிக்கு ஒரு சொகுசு பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். அவருடன் 4 கார்களும் சென்றன.

ரஹன்கலா சுங்க கட்டண மையத்தில் அவர்கள் வந்தபோது ஊழியர்கள் சொகுசு பஸ்சுக்கு சுங்க கட்டணம் செலுத்தும்படி கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த எம்.பி.யின் பாதுகாவலர்கள் சுங்க கட்டண மையத்தின் ஊழியர்களை தாக்கினார்கள். அதோடு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எம்.பி.யும் ஊழியர்களை மிரட்டினார். இந்த சம்பவம் முழுவதும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த தாக்குதலில் 5 ஊழியர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்