எல்லையில் மரம் விழுந்து ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை ராணுவ வீரர் உயிரிழப்பு

காஷ்மீரில் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை ராணுவ வீரர் மரம் முறிந்து விழுந்ததில் பலியானார்.

Update: 2019-07-18 10:49 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராமன்தீப் சிங் (வயது 35) என்பவர் தலைமையில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.  இதனை அடுத்து மரம் ஒன்று முறிந்து சிங் மீது விழுந்துள்ளது.  இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.  அவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

நாயக் அந்தஸ்தில் பணிபுரிந்த அவரது மறைவுக்கு ராணுவத்தின் அனைத்து தரத்தில் உள்ள அதிகாரிகளும் இன்று இறுதியஞ்சலி செலுத்தினர்.  பிற பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளும் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.  அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.

மேலும் செய்திகள்