லாட்டரி மோசடி வழக்கில் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.119 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

லாட்டரி மோசடி வழக்கில் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.119 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது.

Update: 2019-07-22 20:12 GMT
புதுடெல்லி,

மார்ட்டின் லாட்டரி ஏஜென்சிஸ் நிறுவனத்தை முன்பு நடத்தி வந்த சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் அவரது கூட்டாளிகள் லாட்டரி ஒழுங்குமுறை விதிகளை மீறி சிக்கிம் அரசை ஏமாற்றியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறையும் கேரளாவில் சிக்கிம் லாட்டரி டிக்கெட்களை விற்றதன் மூலம் கள்ளத்தனமாக ரூ.910.3 கோடி லாபம் ஈட்டி அதனை 40 நிறுவனங்களின் பெயரில் அசையா சொத்துகள் வாங்க பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே மார்ட்டின் மற்றும் அவரது கூட்டாளிகளின் ரூ.130.5 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இப்போது மேலும் ரூ.119.6 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை முடக்கியுள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 61 அடுக்குமாடி குடியிருப்புகள், 82 காலி மனைகள், 6 கட்டிடங்களுடன் கூடிய மனைகள் ஆகியவை அடங்கும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்