6 விமான நிலையங்கள் தனியார் மயமாகின்றன - மத்திய அரசு தகவல்

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டம் உள்ளதா? கொல்கத்தா விமான நிலையம் தனியாரிடம் ஒப்படைக்கப்படுமா? போன்ற கேள்விகளை எழுப்பினார்.

Update: 2019-07-26 00:06 GMT

புதுடெல்லி, 

 சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் புரி பதிலளிக்கும் போது கூறுகையில், ‘விமான நிலையங்களின் தகுதியின் அடிப்படையில் அவற்றை தனியார் மயமாக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி தனியார் மயமாக்கலுக்காக 6 விமானங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில் 3 விமான நிலையங்களை தனியாருக்கு அளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கொல்கத்தா விமான நிலையத்தை உடனடியாக தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை’ என்று கூறினார்.

இந்த விமான நிலையங்களை பெற்றிருக்கும் நிறுவனம் எது? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 6 விமான நிலையங்களுக்காக 9 நிறுவனங்களிடம் இருந்து ஏல டெண்டர்கள் பெறப்பட்டன எனவும், இதில் 3 விமான நிலையங்கள் அதானி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

மேலும் செய்திகள்