90 சதவீத மாநிலங்கள் மரண தண்டனை தொடர ஆதரவு

90 சதவீத மாநிலங்கள் மரண தண்டனை தொடர ஆதரவு அளித்துள்ளதாக உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

Update: 2019-07-26 20:00 GMT
புதுடெல்லி,

மாநிலங்களவையில் நேற்று மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற தனிநபர் தீர்மானம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் பதில் அளித்த உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி கூறியதாவது:-

2015-ம் ஆண்டு சட்டக் கமிஷன் பயங்கரவாதம் மற்றும் இந்தியா மீது போர் தொடுப்பது போன்ற வழக்குகள் தவிர மற்ற வழக்குகளில் மரண தண்டனையை ஒழித்துவிடலாம் என்று பரிந்துரைத்தது. அதைத்தொடர்ந்து மாநில அரசுகள் தங்கள் கருத்தை தெரிவிக்க மத்திய அரசு வலியுறுத்தியது. பலமுறை நினைவூட்டிய பின்னர் 5 யூனியன் பிரதேசங்கள் உள்பட 19 மாநிலங்கள் பதில் அளித்துள்ளன. இதில் ஒரு மாநிலம் தவிர, 90 சதவீத மாநிலங்கள் மரண தண்டனை தொடர வேண்டும் என்று கூறியுள்ளன.

எந்த சமுதாயமும் ஒரு நபரை கொல்வதை விரும்பவில்லை. ஆனால் மறுபுறம் நிர்பயா போன்ற கொடூர குற்றங்களும் இதே சமுதாயத்தில் தான் நடைபெறுகிறது. எனவே இதுபற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்