விவசாயிகள் தற்கொலை விவகாரம்: உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் உத்தரபிரதேச அரசை பிரியங்கா காந்தி கடுமையாக சாடினார்.

Update: 2019-07-27 13:44 GMT
புதுடெல்லி, 

உத்தரபிரதேசத்தின் பந்தல்கந்த் பகுதியில் சமீபத்தில் 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த செய்தியை  முன்வைத்து  உத்தரபிரதேச அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

 பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் இது பற்றி கூறியிருப்பதாவது:- “ விவசாயிகள் பயிர்களை வளர்க்கிறார்கள். அதற்கான விலையை அவர்கள் பெறவில்லை. பஞ்சம் ஏற்படுகிறது. நிவாரணம் கிடைக்கவில்லை. 

பந்தல்கந்த் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தினந்தோறும் அச்சத்தில் வாழ்கிறார்கள். வாழ வழியின்றி தற்கொலை செய்கிறார்கள். என்ன மாதிரியான விவசாய கொள்கை மற்றும் கடன் தள்ளுபடி திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது?’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்