மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு கடும் சரிவு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு கடும் சரிவை சந்தித்துள்ளது.

Update: 2019-08-05 05:20 GMT
மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் மதிப்பு மளமளவென சரிந்து 531.94 புள்ளிகள் அல்லது 1.43 சதவீதம் என்ற அளவில் குறைந்து 36,586.28 புள்ளிகளாக உள்ளது.  சென்செக்ஸ் மதிப்பு நேற்றைய முடிவில், 99.90 புள்ளிகள் அல்லது 0.27 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து 37,118.22 புள்ளிகளாக இருந்தது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு இன்று 171.05 புள்ளிகள் குறைந்து 10,826.30 புள்ளிகளாக உள்ளது.

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பதற்றம் நிறைந்த சூழலில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  மொபைல் இன்டர்நெட் சேவை தற்காலிக ரத்து, பல்வேறு தலைவர்களை வீட்டு காவலில் வைப்பது மற்றும் கைது ஆகிய அடுத்தடுத்த நடவடிக்கைகள் பங்கு சந்தைகளில் முதலீட்டாளர்களை அச்சமடைய செய்துள்ளது.

மும்பை பங்கு சந்தையில் எஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, எஸ்.பி.ஐ., டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் மற்றும் மாருதி ஆகியவற்றில் 8.49 சதவீதம் என்ற அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

டி.சி.எஸ்., இன்போசிஸ், பாரதி ஏர்டெல் மற்றும் எச்.டி.எப்.சி. ஆகியவற்றின் வர்த்தகம் லாபத்துடன் செயல்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்