தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்தியாவும் ரத்து செய்தது

ஜோத்பூர் - கராச்சி இடையிலான தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்தியாவும் ரத்து செய்துள்ளது.

Update: 2019-08-16 11:49 GMT

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு பதிலடி தருவதாக   இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயில், தார் எக்ஸ்பிரஸ் ரெயில்  சேவையை பாகிஸ்தான் ரத்து செய்தது.  

பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் சாகித் ராஷித் இதுதொடர்பாக பேசுகையில், “தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையையும் ரத்து செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். நான் ரெயில்வே அமைச்சராக இருக்கும் வரையில் இருநாடுகள் இடையே ரெயில்கள் இயக்கப்படாது” என்றார்.

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பர்மெர் இடையில் இயக்கப்படும் தார் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவையை இந்தியாவும் நிறுத்தியுள்ளது. அடுத்தக்கட்ட உத்தரவு வரும்வரையில் ரெயில்  சேவையை நிறுத்தி வைப்பதாக ரெயில்வே அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்