சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

Update: 2024-05-08 04:34 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.80 குறைந்து ரூ.53,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,630-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்