இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றால் வாழ்நாளில் மறக்க முடியாத பதிலடி கிடைக்கும்: வெங்கையா நாயுடு

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பவர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பதிலடி கிடைக்கும் என வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.

Update: 2019-08-28 10:09 GMT
விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசும்பொழுது, இந்தியா எந்தவொரு நாடு மீதும் தாக்குதல் நடத்தியதில்லை.  வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து தாக்குதல் நடத்தினர்.  நாம் யாரையும் தாக்கவில்லை.

ஆனால் யாரேனும் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத வகையில் நமது பதிலடி இருக்கும் என கூறினார்.

நமது அண்டை நாடுகளில் ஒன்று தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு உதவி செய்கிறது, நிதி வழங்குகிறது மற்றும் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.  

மனித குலத்திற்கு சேதம் விளைவிக்கிறோம் என்பது பற்றியும், வருங்காலத்தில் இந்த சேதம் அவர்களுக்கே திரும்பும் என்றும் உணராமல் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.  இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட நாம் விரும்பவில்லை.  ஆனால், காஷ்மீர் விவகாரம் பற்றி பேசி நமது உள்நாட்டு விவகாரத்திலும் வேறு யாரும் தலையிட கூடாது என்றும் நாங்கள் விரும்புகிறோம்.  காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்