இந்தி மொழி விவகாரம்: எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது - அமித்ஷா விளக்கம்

எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என இந்தி மொழி விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2019-09-18 12:42 GMT
புதுடெல்லி,

இந்தி மொழி விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன்.எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. மொழிகளை வலிமைப்படுத்த தவறினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போல் நமது மொழி எது என்று தெரியாமல் போகும்.  

நான் எப்போதும் சொல்வது போல, இந்திய மொழிகளை வலிமைப்படுத்த வேண்டும். தனது தாய்மொழியில் படிக்கும் போதுதான் ஒரு குழந்தையால் நன்றாக படிக்க முடியும்.

நானே... இந்தி அல்லாத குஜராத்தில் இருந்து வருகிறேன். சிலர் அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்களின் விருப்பம் என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்