இ-சிகரெட் ஏற்றுமதிக்கு தடை வர்த்தக அமைச்சகம் உத்தரவு

இ-சிகரெட் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-30 19:30 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், வினியோகம் செய்தல், இறக்குமதி செய்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல், விளம்பரம் செய்தல் உள்பட அனைத்துக்கும் தடை விதிக்கப்படுவதாக கடந்த 18-ந்தேதி மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதில், இ-சிகரெட் தடையை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த அவசர சட்டத்தை தொடர்ந்து இ-சிகரெட் மற்றும் இ-ஹூக்கா ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதிப்பதாக வர்த்தக அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. இ-சிகரெட்டை எந்த பெயரிலும், எந்த வடிவத்திலும், எந்தவொரு அளவிலும் ஏற்றுமதி செய்ய தடைவிதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்