விடுதலைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு: ஐ.பெரியசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

விடுதலைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீட்டு வழக்கில், ஐ.பெரியசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Update: 2019-09-30 21:56 GMT
புதுடெல்லி,

கடந்த 2014-ம் ஆண்டு மதுரை மாவட்டம் அய்யம்பாளையத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிகளுக்கு அனுமதி அளித்ததாகவும், சட்டவிரோதமாக குவாரி வைத்திருந்ததாகவும், அதிலிருந்து அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது, வெடிபொருட்கள் வைத்திருந்தது, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது என முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவருடைய உதவியாளர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கிருஷ்ண முராரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு ஐ.பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்