கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் பயன்படுத்த தடை

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் பயன்படுத்துவதற்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது.

Update: 2019-10-18 09:57 GMT
லக்னோ 

உத்தரபிரதேச உயர் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கல்லூரி நேரங்களில் ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் நேரத்தை மொபைல் போன்களில் செலவிடுவதை அரசு கவனித்து வந்தது. அதன் அடிப்படையில் மாநிலத்தின் அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கற்பித்தல் சூழலை உறுதி செய்வதற்காக மொபைல்போனுக்கு தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குள்  மாணவர்கள் இனி செல்போன்களை எடுக்கவோ பயன்படுத்தவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த தடை மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்