மக்கள் நாட்டிற்காக பணியாற்ற பல்வேறு வழிகள் உள்ளன -பிரதமர் மோடி பேச்சு

மக்கள் நாட்டிற்காக பணியாற்ற பல்வேறு வழிகள் உள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2019-10-24 13:51 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி, இன்று 24-ம் தேதி வாரணாசி தொகுதியைச் சேர்ந்த பாஜகவினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்று நாம் அனைவரும் நம்முடைய குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடுகிறோம். அந்தவகையில் எல்லைகளிலும், நாட்டிற்குள்ளும், பாதுகாப்புப் படையினராக இருந்தாலும், காவல்துறையினராக இருந்தாலும், என்.டி.ஆர்.எஃப் பணியாளர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பது நமது கடமையாகும். அத்தகைய அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.

வாரணாசியில் பல நல திட்டங்களை செயல்படுத்த பாஜகவினர் உதவி செய்து வருகிறார்கள். இது எனக்கு பெருமை மற்றும் திருப்தி அளிக்கும் விஷயம் ஆகும்.  சமீபத்தில் தொலைகாட்சியில் நிகழ்சி ஒன்றை பார்த்தேன். அதில் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்கும் வகையில், இங்கு, பிளாஸ்டிக் குப்பை கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு அதன் எடைக்கு நிகரான உணவு வழங்கப்படும். அரை கிலோ பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் பிரேக்ஃபாஸ்ட், ஒரு கிலோ குப்பை கொடுத்தால் இலவச உணவு தரப்படும் என்று கூறியது வரவேற்கத்தக்கது. இது போல மக்கள் நாட்டிற்காக பணியாற்ற பல்வேறு வழிகள் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்