ரேஷன் வினியோகம் நிறுத்தம்: திரிபுரா அகதிகள் முகாமில் பட்டினியால் 2 பேர் சாவு?

ரேஷன் வினியோகம் நிறுத்தப்பட்டதால் திரிபுரா அகதிகள் முகாமில் பட்டினியால் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-11-03 20:00 GMT
அகர்தலா,

திரிபுராவின் கஞ்சன்பூர் மாவட்டத்தில் புரூ அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமுக்கு கடந்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை மத்திய அரசு நிறுத்தியது. இதனால் அங்குள்ள மக்கள் உணவு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

அங்கு வசித்து வந்த ஒரு 2 வயது குழந்தை மற்றும் 60 வயது பெண் என 2 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். அவர்கள் பட்டினியால் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் பட்டினி காரணமாக குழந்தைகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் நோயில் வாடி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவங்களால் முகாமில் தங்கியிருக்கும் அகதிகள் அனைவரும் அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் ஆனந்தபசாரில் உள்ள உணவு குடோனை கொள்ளையிடப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

முகாமுக்கு மீண்டும் ரேஷன் வினியோகம் செய்ய வேண்டும் என புரூ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்