அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலி; ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்

அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலியாக ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-11-09 06:48 GMT
காஷ்மீர்,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இறுதி தீர்ப்பினை வாசித்தது.  இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்குகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.

இந்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து அலகாபாத் நீதிமன்றம் வழங்கியது தவறு.  கடந்த 1857ம் ஆண்டுக்கு முன் சர்ச்சைக்குரிய இடத்தில், உரிமைக்கான ஆவணங்களை நிரூபிக்க முஸ்லிம் அமைப்புகள் தவறி விட்டன.  அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும்.  முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்காக தகுந்த இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்கவும் நீதிபதிகள் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவினை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.  சாலையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.  இதனால் ஜம்மு மற்றும் ரியாசி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வாகன போக்குவரத்து எதுவுமின்றி வெறிச்சோடி உள்ளன.

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, பின்பு ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து கடந்த ஆகஸ்டு 5ல் மத்திய அரசு அறிவித்தது.

இதனை தொடர்ந்து முறைப்படி, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன.  அவற்றிற்கு தனித்தனியே ஆளுநர்கள் சமீபத்தில் பதவியேற்று கொண்டனர்.  இந்நிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.  சாலையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.  இதனால் ஜம்மு மற்றும் ரியாசி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வாகன போக்குவரத்து எதுவுமின்றி வெறிச்சோடி உள்ளன.

மேலும் செய்திகள்