விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2019-11-09 19:47 GMT
புதுடெல்லி,

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் உணவுத்துறை செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வெங்காயம் வருகிற 15-ந்தேதி முதல் நாடு முழுவதும் வினியோகம் செய்யப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்