சார்ஜ் போடும் பொது செல்போன் வெடித்து வாலிபர் பலி

சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் போது திடீரென சூடாகி செல்போன் வெடித்ததில், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

Update: 2019-11-11 06:16 GMT
லக்னோ,

உத்தரபிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியில் உள்ள கோபால்பூரில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது வீட்டில், செல்போனை சார்ஜ் செய்துள்ளார். சிறிது நேரத்தில், சார்ஜ் ஏறிக்கொண்டு இருந்தபோதே, புகை மற்றும் சப்தத்துடன் செல்போன் வெடித்துள்ளது.

செல்போன் அருகே இருந்த இளைஞர் இதில் பலத்த காயம் அடைந்தார். உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலிவு விலையில் கிடைக்கும் சார்ஜர்கள் இதுபோன்ற விபத்துக்களில் முக்கிய பங்கு வகிப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகின்றனர். மின்சாரத்தை செல்போனுக்கு எடுத்துச் செல்லும் போது, மலிவு விலை சார்ஜர்கள் முறையாக இயங்காது. இதனால், அதிகளவில் மின்சாரம் செல்போன் பேட்டரிக்கு செல்லும்.

அப்படி செல்கையில் பேட்டரியானது சூடாகி, வெடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்