மராட்டியத்திற்கு ஒரு நிலையான அரசு தேவை, ஒரு 'கிச்சடி' அரசு அல்ல - முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டியத்திற்கு ஒரு நிலையான அரசு தேவை, ஒரு 'கிச்சடி' அரசு அல்ல என முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Update: 2019-11-23 05:10 GMT
மும்பை

மராட்டிய அரசியலில் திடீர் திருப்பமாக   முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரியாக அஜித் பவார் இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர்.  அவர்களுக்கு  ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இது குறித்து மூத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறும் போது,  அஜித் பவாரும் அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் மராட்டியத்தை  அவமதித்துள்ளனர் என கூறினார்.

பதவி ஏற்றுக் கொண்ட  முதல்வர் பட்னாவிஸ் கூறும் போது, 

மக்கள் எங்களுக்கு ஒரு தெளிவான  முடிவை  வழங்கி உள்ளனர்.  ஆனால் சிவசேனா  மற்ற கட்சிகளுடன்  கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றது. ஆனால் முடியவில்லை.  இதன் விளைவாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மராட்டியத்திற்கு  ஒரு நிலையான அரசு தேவை, ஒரு 'கிச்சடி' அரசு அல்ல. "

தேசியவாத காங்கிரசின் அஜித்பவாருக்கு  எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மராட்டிய மாநிலத்திற்கு  ஒரு நிலையான அரசை  வழங்கவும், பாஜகவுடன் இணைந்து கொள்ளவும் அவர் இந்த முடிவை எடுத்து உள்ளார். வேறு சில தலைவர்களும் எங்களுடன் வருவார்கள். நாங்கள் அரசு  அமைப்பதாகக் கூறினோம் என கூறினார்.

மேலும் செய்திகள்