சிறையில் இருந்து விடுதலையாகிறார் ப.சிதம்பரம்; சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.

Update: 2019-12-04 05:35 GMT
புதுடெல்லி.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட்டார். அவருக்கு இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது. 

இதே விவகாரம் தொடர்பான மற்றொரு வழக்கில் அவர், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 15ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. 

100 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில் இன்று,  ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. 

ப.சிதம்பரம் சாட்சிகளை கோபப்படுத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது . மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அல்லது பகிரங்க அறிக்கைகளை வெளியிடவோ கூடாது என நிபந்தனை விதித்து உள்ளது.

மேலும் செய்திகள்