அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும்

அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-17 20:41 GMT
கோழிக்கோடு,

கேரள மாநிலம் கண்ணூரில் விமான நிலையம் தொடங்கப்பட்டு முதலாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசியபோது கூறியதாவது:-

கண்ணூரில் விமான நிலையம் தொடங்கப்பட்ட இந்த ஒரு ஆண்டில் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அடுத்த ஆண்டு முதல் இங்கு இருந்து அரபு நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும். வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வருகிறார்கள்.

இவர்கள் கண்ணூருக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து காரில் சபரிமலைக்கு செல்கிறார்கள். இவர்கள் வசதிக்காக சபரிமலையில் புதிதாக விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் சபரிமலைக்கு விமான சேவை தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்