சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு ரத்து

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-25 07:23 GMT
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மராட்டிய அரசு திரும்ப பெற்றுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு இதுநாள் வரை  எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.  ”எக்ஸ்” பிரிவின் கீழ் 24 மணி நேரமும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பாதுகாப்பு வழங்கும் பணியில் இருப்பார்.

டெண்டுல்கரை தவிர  பாஜக தலைவர் எக்நாத் காட்சேவுக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டுள்ளது.  உத்தர பிரதேச முன்னாள் கவர்னர் ராம்நாயக்கிற்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு எக்ஸ் பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது.  

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு வழங்கப்பட்ட ஒய் பிளஸ் பாதுகாப்பு, இசட் பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் எம்.எல்.ஏ.வுமான ஆதித்ய தாக்கரேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆதித்ய தாக்கரேவுக்கு இதுநாள் வரை ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. 

முக்கிய பிரமுகர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் படி அவ்வப்போது பாதுகாப்பு மறு ஆய்வு செய்யப்படும் என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்