ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அபராதம்: ஆவேசத்தில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த இளைஞர்

டெல்லியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கு போலீசார் அபராதம் விதித்ததால் ஆவேசம் அடைந்த இளைஞர் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2020-01-02 11:46 GMT
புதுடெல்லி,

டெல்லி, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. 

இந்நிலையில்,  தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் விகாஸ் 
(வயது 20) என்ற இளைஞர் ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது போக்குவரத்து போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தி 
ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அபராதம் விதித்தனர். இதனை அடுத்து சிறிது நேரம் அமைதியாக இருந்த விகாஸ், திடீரென ஆவேசமடைந்து தனது இருசக்கர வாகனத்திற்கு  தீ வைத்து எரித்தார்.

இதனை அடுத்து போக்குவரத்து போலீசார் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் விரைந்து வந்து பைக்கை நீரூற்றி அணைத்தனர்.

பின்னர் இருசக்கர வாகனத்திற்கு  தீ வைத்து எரித்த விகாஸை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்