உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது -பிரதமர் மோடி

உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.

Update: 2020-01-28 08:11 GMT
காந்திநகர்,

குஜராத்தில் மூன்றாவது உலகளாவிய உருளைக்கிழங்கு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி  உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் அரசாங்க கொள்கைகளின் காரணமாக சில உணவு தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.

2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பல முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாத தொடக்கத்தில், ரூ.12000 கோடியை நேரடியாக ஆறு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதன் மூலம் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்