வரலாற்று அநீதியை சரிசெய்யவே குடியுரிமை திருத்த சட்டம் -என்.சி.சி பேரணியில் பிரதமர் மோடி பேச்சு

வரலாற்று அநீதியை சரிசெய்யவே மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்தது என என்.சி.சி பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Update: 2020-01-28 10:08 GMT
புதுடெல்லி

டெல்லியில் நடைபெற்ற என்.சி.சி பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வரலாற்று அநீதியை சரிசெய்வதற்கும், அண்டை நாடுகளில் வாழும் சிறுபான்மையினருக்கு எங்கள் பழைய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும் எங்கள் அரசாங்கம் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது.

தற்போதைய அரசாங்கம் பல ஆண்டுகளாக நாட்டை பாதிக்கும் பழைய பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கிறது. முந்தைய அரசுகள், இந்த பிரச்சினையை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக கருதின.

சுதந்திரத்திற்குப் பின்னர் ஜம்மு-காஷ்மீரில் பிரச்சினை நீடித்து வந்தன. சில குடும்பங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த பகுதியில் பிரச்சினைகளை உயிரோட்டத்துடன் வைத்து இருந்தனர். இதன் விளைவாக அங்கு  பயங்கரவாதம் செழித்து வளர்ந்தது.

அண்டை நாடு மூன்று போர்களில் தோல்வி அடைந்து உள்ளது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பினாமி போர்களை நடத்தி வருகிறது.

தற்போது, ஜம்மு காஷ்மீர் மட்டுமல்ல நாட்டின் பிற பகுதிகளும்  அமைதியானவை. பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு பிராந்தியத்தின் அபிலாஷைகளை அரசாங்கம் தீர்க்க முடிந்தது என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்