அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண் ஜித் சிங் சந்து நியமனம்

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண் ஜித் சிங் சந்து வை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.

Update: 2020-01-28 15:55 GMT
புதுடெல்லி,

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண் ஜித் சிங் சந்து வை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.  தரண் ஜித் சிங்  தற்போது இலங்கைக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 

1988-ம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறையில்  தரண் ஜித் சிங் பணியாற்றி வருகிறார். 1998ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்தியதற்கு இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த போது, வாசிங்டனில் இந்தியாவுக்கான செயலாளராக பணியாற்றி வந்த  தரண் சிங்கே, பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தி இந்திய, அமெரிக்க உறவை மேம்படுத்த முயற்சி செய்தார். 

பல ஆண்டுகள் வாஷிங்டனில் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தரண்ஜித் சிங் சந்து என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்