டிரம்ப் குஜராத் வருகை: முதல்-மந்திரி தகவல்

டிரம்ப் குஜராத் வர உள்ளதாக முதல்-மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-29 20:08 GMT
புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் பிப்ரவரி 24, அல்லது 26-ந்தேதி இந்தியா வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய, அமெரிக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். விரைவில் சுற்றுப்பயண தேதி இறுதி செய்யப்படும்.

இதற்கிடையே குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றுப்படுகையை டிரம்ப் பார்வையிட உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி கூறியுள்ளார். டெல்லி சாஸ்திரி நகரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், ‘பிரதமர் நரேந்திரமோடியின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த ஆசிய கண்டத்திலேயே சுத்தமான ஆறாக சபர்மதி நதி விளங்குகிறது. ஜப்பான், இஸ்ரேல் நாட்டு பிரதமர்கள் இதனை பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் வருகிறார். அவரும் சபர்மதி ஆற்றுப்படுகையை பார்வையிடுகிறார்’ என்று குறிப்பிட்டார். ஆனால் டிரம்ப் வரும் தேதியை அவர் குறிப்பிடவில்லை.

மேலும் செய்திகள்