மத்திய பட்ஜெட்: புரிந்து கொள்ள வெகு நேரம் தேவைப்படுகிறது - மன்மோகன் சிங்

மத்திய பட்ஜெட்டை புரிந்து கொள்ள வெகு நேரம் தேவைப்படுகிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-01 15:15 GMT
புதுடெல்லி,

2020-21 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இரண்டு மணி நேரம், 40 நிமிடங்களுக்கும் அதிகமான நேரம் இவர் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்.  

இந்த பட்ஜெட் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-

மிக நீண்ட பட்ஜெட். அதனால் என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள வெகு நேரம் தேவைப்படுகிறது என்றார்.

பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்றே அது குறித்து மன்மோகன் சிங் கருத்து கூறுவது மிக அரிதான ஒன்றாகும்.

மேலும் செய்திகள்