ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி வாக்கு, புல்லட் அல்ல - யோகி ஆதித்யநாத்

ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி வாக்கு தான் புல்லட் அல்ல என்று உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Update: 2020-02-01 17:50 GMT
புதுடெல்லி,

டெல்லியில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக, ஆளும் அரசான ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், டெல்லியில் உள்ள கரவால்நகரில் பிரசாரத்தில் ஈடுபட்ட உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-

ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி வாக்கு. புல்லட் அல்ல. உங்கள் வாக்குகளை செலுத்தும் படி முறையிட நான் வந்துள்ளேன். டெல்லி மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலால் சுத்தமான குடிநீரை வழங்க முடியாது. டெல்லி மிகவும் மாசுபட்ட குடிநீரைப் பயன்படுத்துகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால் கெஜ்ரிவாலுக்கு மெட்ரோ, சுத்தமான நீர், மின்சாரம் தேவையில்லை, அவருக்குத் தேவை ஷாஹின்பாக் தான், எது தேவை என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். போராட்டக்காரர்களுக்கு பிரியாணி பொட்டலம் அளிக்க அவர் பணம் வழங்குவார் வளர்ச்சிக்காக அல்ல. 

டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் போராட்டங்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அல்ல. இந்தியா வல்லரசாகி விடகூடாது என்று கருதுபவர்கள் தான் போராடுகின்றனர். இவர்களின் மூதாதையர்கள் தான் இந்தியாவை இரண்டாக உடைத்தனர்.  

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்