தூக்கு தண்டனையை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் முயற்சி ; திகார் சிறை நிர்வாகம் தகவல்

தூக்கு தண்டனையை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய்குமார் சர்மா தனக்குத்தானே காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Update: 2020-02-20 04:05 GMT
புதுடெல்லி,

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.  நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.  

இந்த நிலையில், தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சியாக குற்றவாளி வினய் குமார் சர்மா,  கடந்த 16 ஆம் தேதி,  தலையை சுவற்றில் மோதி தனக்குத் தானே காயத்தை ஏற்படுத்தி இருப்பதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நல்ல உடல் நலத்துடன் கைதி இருந்தால் மட்டுமே தூக்கு நிறைவேற்றப்படும் என்பதால் தனக்குத்தானே வினய்குமார் சர்மா காயம் ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்