சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்? -யோகி ஆதித்யநாத்

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது சாக வேண்டும் என வருபவர்கள் எப்படி உயிர்வாழ்வார்கள் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

Update: 2020-02-20 04:44 GMT
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் : கோப்பு படம்
லக்னோ

நேற்று நடந்த உத்தரபிரதேச சட்டசபை கூட்டத்தில்  முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும் போது கூறியதாவது:-

கவர்னரின் வழக்கமான உரையின் போது மேடையை நோக்கி  காகித பந்துகள்  வீசப்பட்டது, இதன் மூலம் உயர்ந்த அரசியலமைப்பு பதவியை இழிவுபடுத்தி உள்ளனர் என கடந்த காலங்களில் சமாஜ்வாடி எம்.எல்.ஏக்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத்  சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் பேசும் போது அரசியலமைப்பை அவமதித்தவர்கள் இன்று எங்களுக்கு அரசியலமைப்பு குறித்து போதிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் விலகி இருப்பது நல்லது என கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பாக சட்டம் - ஒழுங்கு, உள்கட்டமைப்பு, பொருளாதாரம், விவசாயம், கல்வி மற்றும் ஆரோக்கியம் என  தனது அரசின் முக்கிய சாதனைகளை பட்டியலிட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரபிரதேசத்தில் நடந்த  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது போலீசாரின்   நடவடிக்கையை ஆதரித்து பேசிய யோகி ஆதித்யநாத் கொல்லப்பட்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்ட மற்றவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்,  சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்? என கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்கள் தேசிய பதிவேடு  (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தின் போது சுமார்  20 பேர் கொல்லப்பட்டனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக இறந்தவர்களின் குடும்பங்கள் குற்றம் சாட்டிய போதிலும், அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருவது குறிப்பிடதக்கது .

மேலும் செய்திகள்