திருப்பூர் பேருந்து விபத்து ; பிரதமர் மோடி இரங்கல்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-20 08:13 GMT
புதுடெல்லி,

பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு 48 பயணிகளுடன் கேரள அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் அவிநாசி அருகே வந்த போது, கண்டெய்னர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் பலியாகினர்.  படுகாயம் அடைந்த பயணிகள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், அவிநாசி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி அலுவலக டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது ;-  ‘‘தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்த தகவலையறிந்து மிகுந்த துயரமடைந்தேன். 

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்