டெல்லி வன்முறை: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் - ஓம் பிர்லா

டெல்லி வன்முறை: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் - ஓம் பிர்லா

Update: 2020-03-03 11:11 GMT
படம்: ஏ.என்.ஐ.
புதுடெல்லி,

பட்ஜெட் கூட்டத்தொடரின்  இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் நேற்று கூடியது.  டெல்லி வன்முறைக்கு பொறுப்பு ஏற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின்  இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை 11 மணிக்கு கூடியதும் டெல்லி வன்முறைக்கு பொறுப்பு ஏற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மாநிலங்களவை பிற்பகல்  2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

2 மணிக்கு பின்னர் அவை மீண்டும் கூடியதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டது.  இதனை அடுத்து நாடாளுமன்ற மேலவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், 

அனைவரும் சபாநாயகர் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பின்னர் 11-ம் தேதி விவாதம் நடக்கும் எனக்கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்