கொரோனா தடுப்பு: பொது மக்கள் தாராளமாக நிதி வழங்க பிரதமர் மோடி வேண்டுகோள்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் நிவாரண நிதி வழங்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Update: 2020-03-28 12:19 GMT
புதுடெல்லி


கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் யுத்தத்திற்கு நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

அந்த மனப்பான்மையை மதித்து, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கு இது வழிவகுக்கும்.

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளார் பிரதமர்.தங்களால் இயன்ற பண உதவிகளை செய்ய பிரதமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

நீங்கள் அனுப்பும் சிறு தொகை, பேரிடர் மேலாண்மை மற்றும் மக்களை காப்பாற்றும் ஆராய்ச்சிக்கு பயன்படும் என மோடி கூறி உள்ளார்.

PM CARES என்கிற பெயரில் நிதி பெறுவதற்கான வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.

pmindia.gov.in எனும் இணையதளத்திற்கு சென்று பொதுமக்கள் நிதி வழங்கலாம்.

கொரோனாவுக்கு மட்டும் அல்லாமல் பேரிடர்களின் போது பொதுமக்களுக்கு உதவ இது வழங்கும்.      


மேலும் செய்திகள்