ஊரடங்கிற்கு பின்னர் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் - ராகுல் காந்தி

ஊரடங்கிற்கு பின்னர் உள்ள திட்டங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Update: 2020-05-08 09:00 GMT
புதுடெல்லி

கொரோனா வைரஸ் தொற்று  மற்றும்  பொருளாதார நெருக்கடி குறித்த வீடியோ கான்பரன்சிங் மூலம் நிருபர்களுக்கு  காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மே 17 அன்று முடிவடையும் கொரோனா வைரஸ் ஊரடங்கிறகு பின்னர் நடைமுறைபடுத்தப்படும் திட்டத்தில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க  வேண்டும். நாட்டுக்கு ஒரு வலுவான பிரதமர் மட்டுமல்ல, வலுவான முதலமைச்சர்களும் தேவை. பிரதமர் அலுவலகத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டால் நாடு கொரோனா வைரஸ் போரில் தோல்வியை தழுவும்.பெரிய மாற்றம் தேவை அரசாங்கத்திற்கும் மாநிலங்களுக்கும், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு தேவை

எந்தெந்த பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறமாக வகைப்படுத்துவது என்பதை மத்திய அரசு முடிவு செய்கிறது. ஆனால், உண்மையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்குதான் அந்தந்த பகுதிகளின் உண்மையான நிலவரம் தெரியும். அவர்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்த வேண்டும் .ஒரு சக ஊழியராக, ஒரு முதலாளியாக அல்ல.

ஊரடங்கு  காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு உதவி வழங்காமல் நாம் மீண்டும் தொடர முடியாது. ஊரடங்கு  ஒரு உளவியல் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. இது ஆன்-ஆஃப் சுவிட்ச் அல்ல. தற்போது, இந்த நோயைப் பற்றி மக்கள் மிகவும் பயப்படுகிறார்கள், எனவே நாம் மக்களின் மனதில் உளவியல் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அரசாங்கம் ஊரடங்கை தளர்த்தும் போது  இந்த அச்சத்தை நம்பிக்கையின் உணர்வாக மாற்ற வேண்டும்.

நாம் அவசர நிலையில் இருக்கிறோம், ரூ .7500 உதவி தொகையை நேரடியாக ஏழைகளின் கைகளில் செலுத்துவதற்கான யோசனை மிக முக்கியமானது. 

நமது விநியோகச் சங்கிலியும், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சுகாதார அமைப்புகளும் மோதிக் கொண்டிருக்கின்றன. புலம்பெயர்ந்தோருக்கும் ஏழைகளுக்கும் உடனடியாக பணம் தேவை. எம்எஸ்எம்இக்கு உடனடியாக பணம் தேவை, இல்லையெனில் வேலைகள் இல்லாதது சுனாமியாக மாறும் என கூறினார்.

ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரின் நிலை குறித்த கேள்விக்கு, வேலைகள், தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உயிர்வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது அல்லது குடும்பங்களுடன் நூற்றுக்கணக்கான கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும்.  இது நெருக்கடி குறித்து அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய நேரம் அல்ல என கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஊரடங்கு குறித்து ரகுராம் ராஜன் மற்றும் அபிஜீத் பானர்ஜி போன்ற நிபுணர்களுடன் அவர் நடத்திய புதிய விவாதங்கள் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது.

நான் நிறைய பேருடன் பேசுகிறேன். நிறைய விவாதங்கள் சுவாரஸ்யமானவை. இந்த விவாதங்களை  இந்திய மக்களின் பார்வைக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். வேறு எந்த தந்திரமும் இல்லை என்று அவர் பதிலளித்தார்.

மேலும் செய்திகள்