விமான சேவை தொடங்கியவுடன் முழு பாதுகாப்பு கவச உடையுடன் விமான சிப்பந்திகள் பணியாற்றுவர்

விமான சேவை தொடங்கியவுடன், விமானங் களில் சிப்பந்திகள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து பணியாற்றுவார்கள்.

Update: 2020-05-15 22:45 GMT
புதுடெல்லி,

ஊரடங்கு காரணமாக, கடந்த 50 நாட்களாக விமானங்கள் இயக்கப்படவில்லை. வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர் களை அழைத்துவர ஏர் இந்தியா சார்பில் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கு முடிவடைந்த பிறகு, விமான சேவை தொடங்கியதும், விமானங்களில் சிப்பந்திகள் எந்த மாதிரி உடை அணிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

விமான சிப்பந்திகள், பயணிகளுக்கு அருகில் செல்ல வேண்டி இருக்கும். எனவே, கொரோனா பரவுவதை தடுப்பதற்காக, அவர்கள் முழு உடலையும் மறைக்கும்வகையில் பாதுகாப்பு கவச உடைந்து இருப்பார்கள்.

ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்டாரா, ஏர்ஆசியா ஆகிய விமான நிறுவனங்கள், தங்கள் சிப்பந்திகளுக்கு இத்தகைய உடைகளை பரிந்துரைக்க முடிவு செய்துள்ளன.

ஏர்ஆசியா சிப்பந்திகள், முகத்தை முழுமையாக மறைக்கும் கவசம், முக கவசம், கவுன், மார்பு, வயிற்றுப்பகுதியில் அணியும் உடை, கையுறைகள் ஆகியவற்றை அணிந்து பணிபுரிவார்கள்.

விஸ்டாரா சிப்பந்திகள், ஆய்வுக்கூட கவுன், முக கவசம், முகத்தை முழுமையாக மறைக்கும் கவசம் ஆகியவற்றுடன் பணியாற்றுவார்கள். இண்டிகோ சிப்பந்திகள், அறுவை சிகிச்சை அரங்க முக கவசம், கையுறைகள், முகத்தை முழுமையாக மறைக்கும் கவசம், கவுன், பாடி சூட் ஆகியவற்றை அணிந்து பணிபுரிவார்கள்.

ஏர் இந்தியா சிப்பந்திகள், பாடிசூட், கையுறை, முகத்தை முழுமையாக மறைக்கும் கவசம், முக கவசம் ஆகியவற்றை அணிந்து இருப்பார்கள்.

மேலும் செய்திகள்