இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இமாச்சல பிரதேசத்தில் ஜூன்30-வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-25 13:28 GMT
சிம்லா, 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இமாச்சல பிரதேசத்தில் மேலும் 5 வாரங்களுக்கு அதாவது ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

மலைப்பிரதேசமான இமாச்சலில் இதுவரை 214- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இமாச்சல பிரதேசத்தில் உள்ள 12 மாவட்டங்களிலும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கில்  தளர்வுகளை பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசும் அறிவித்து வரும் நிலையில்,  இமாச்சல பிரதேசத்தில் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் பிறப்பித்த தேசிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வரை அமலில் உள்ளது.  மார்ச் 25 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 62- வது நாளாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது.

மேலும் செய்திகள்