புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட 4 ரெயில்கள் மட்டுமே 72 மணி நேரம் தாமதம்: ரெயில்வே வாரியம் தகவல்

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட 4 ரெயில்கள் மட்டுமே 72 மணி நேரம் தாமதம் ஆனதாக ரெயில்வே வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-05-29 23:00 GMT
புதுடெல்லி,

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில்கள் தாமதமாக செல்வதாக பரவலாக பேசப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 28-ந் தேதிவரை, மொத்தம் 3 ஆயிரத்து 840 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில், மொத்தம் 52 லட்சம்பேர் பயணம் செய்துள்ளனர். 90 சதவீத ரெயில்கள், வழக்கமான எக்ஸ்பிரஸ், மெயில்களை விட அதிக வேகத்தில்தான் இயக்கப்படுகின்றன.

4 சிறப்பு ரெயில்கள் மட்டுமே இருப்பிடத்தை சென்றடைய 72 மணி நேரம் ஆகியுள்ளது. கடந்த 20-ந் தேதியில் இருந்து 24-ந் தேதிவரை, உ.பி., பீகார் மாநிலங்களின் தேவைக்காக, 71 ரெயில்கள் மட்டும் திருப்பிவிடப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்