டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை - அரவிந்த கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை என்று அம்மாநில முதல் மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2020-06-15 22:30 GMT
புதுடெல்லி, 

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் ஒரேநாளில் 2,224 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லியில் மொத்தம் 41 ஆயிரம் பேருக்கு தொற்று உள்ளது. 

இதுவரை ஆயிரத்து 327 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நேற்று முன்தினம் உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நோய் தொற்று அதிகரிப்பதால் டெல்லியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டது. மக்களின் சந்தேகத்தை போக்கும் வகையில், ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், டெல்லியில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பல தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்