சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் பிரதமர் மோடிக்கு ஆலோசனை

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கொரோனா நெருக்கடியில் பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.

Update: 2020-06-26 09:12 GMT
புதுடெல்லி

சர்வதேச நாணய நிதியம்  வெளியிட்டுள்ள கணிப்பில், கொரோனா பரவல், ஊரடங்கு கடைப்பிடிப்பு ஆகியவற்றால் நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் வீழ்ச்சியடையும். இரண்டு ஆண்டுகளில் ஒரு சதவீதத்திற்கும் சற்று அதிகமாக மட்டுமே வளரும் எனப் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியலாளரான கீதா கோபிநாத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் இந்தியப் பொருளாதாரம் இரண்டு ஆண்டுகளில் அடையப்போகும் வளச்சி வலிமையான வளர்ச்சி இல்லை என்றபோதிலும், உலகின் மற்ற நாடுகளை ஒத்த வளர்ச்சியாகும்.

இந்த ஆண்டு இந்தியாவில் நம்பமுடியாத ஆழமான சரிவு உள்ளது. சுகாதார நெருக்கடி குறைந்து வருவதால்,  உலகப் பொருளாதாரம் மீண்டு வருகிறது. நீங்கள் மீண்டும் ஊரடங்கை தளர்த்தி வருவதால், இந்தியாவும் மீண்டு வரும்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு  என்ன ஆலோசனை வழங்குவீர்கள் என்று கேட்டதற்கு, "இந்தியா அதன் பரிசோதனை திறனை விரிவுபடுத்த வேண்டும், இன்னும் சில பட்ஜெட் செலவினங்களும் உதவக்கூடும், இது பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நேரடி பணம் மற்றும் வகையான ஆதரவு தேவை  மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மூன்றாவத சீர்திருத்தங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு என்பதை அங்கீகரிப்பது என்று  கூறினார்.

மேலும் செய்திகள்