இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-01 04:12 GMT
புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் கொரோனா பரவல் வேகம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை   5,85,493 ஆக  உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து 3,47,979 பேர் குணமடைந்துள்ள நிலையில்,   2,20,114-பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 507 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  17,400 ஆக உள்ளது.  இந்தியாவில் ஜூன் 30 ஆம் தேதி வரை  86,26,585 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும்  2,17,931 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்