டெல்லியில் இன்று அதிகாலை இடி, மின்னலுடன் கனமழை

டெல்லியில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

Update: 2020-07-05 01:20 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 

மணிக்கு 20 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்